Creative Disturbance
Visa வில்லங்கம்
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:33:50
- Mais informações
Informações:
Sinopse
முதல் மடல்: 'அ' முதல் அமெரிக்காவரை. முதலாவது 'விசா வில்லங்கம்". எப்படியெப்படி தப்பு பண்ணலாம் ? விசா பெறுவதில் எத்தனை எத்தனை வில்லங்கம், முட்டுச் சந்து, உதவிக் கரங்கள், எளிமையான தீர்வுகள் ? உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா-ஆதவன் சிபி ! விசா வழிகாட்டும் வாட்சாப் குழுக்கள், தூதரகம் முன் நிற்கும் அனகோண்டா க்யூ வரிசை, ஒற்றை மனிதனாக கண்டம்விட்டு கண்டம் தாவி அமெரிக்கா சென்று சேரும் கொடுமையான முதல் அனுபவம் ... எங்களில் எவரும் நண்பர்கள், முகம் தெரியாத முன்னாள் மாணவர்கள் துணையின்றி இந்த பதட்டக் கடலை தாண்டவில்லை. டென்ஷனாக இருக்கிறதா ? எங்களுக்கும் இருந்தது. அதை எப்படிக் கடந்தோம் என்பதுதான் இந்த முதல் காதையின் மய்யக் கரு.