Creative Disturbance

Pre-Graduation வேலைவாய்ப்புகள்

Informações:

Sinopse

அ முதல் அமெரிக்காவரை ! புதிதாக MS-முதுநிலை அறிவியல் படிக்க இந்த ஆண்டு அமெரிக்கா வரும் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி. இது மூன்றாவது அத்தியாயம். உங்களுக்காக உரையாடுகிறார்கள், MS-இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆதவன் சிபி மதிவாணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஸ்ரீகாந்த் ! படிக்கும்போதே பகுதி நேரமாக வேலை செய்யலாமா ? பல்கலை வளாகத்திற்கு உள்ளேயே என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ? படிப்புக்கு பாதிப்பு வரக்கூடாது ! வருமானமும் வரவேண்டும் ! அப்படி செய்கிற வேலை, வருங்காலத்தில் நமது தொழிலுக்கு உதவியாகவும் இருக்கவேண்டும். இவைதான் நமக்கு முக்கிய நோக்கங்கள் ! வருமானம் இரண்டாவதுதான். மிகமிக முக்கியமானது ஒரு பேராசிரியரோடு கருவி-செய்முறை-தொழில்நுட்பம் இவற்றை நேரடியாகக் கற்றுக் கொள்வதுதான். கல்லூரி வாழ்வியலைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள மிகமுக்கியமான வேறுபாடு லாபம் இதுதான்: Earning while learning என்று சொல்வார்கள். படிக்கும்போதே பொருள் ஈட்டுவதுதான். பொருள் என்றால் தொழில் அனுபவமும்தான்.